மாட்ரிட், ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத அகதிகள் 100 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. அதேவேளை, ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற பகுதி சீயடா. இந்த நகரம் மொராக்கோவுடன் எல்லையை பகிர்கிறது. இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. சீயடா மொராக்கோவுடன் நிலம், கடல் வழியாக எல்லையை பகிர்கிறது. 100 பேர் பலி இதனிடையே, கடந்த மாதம் 30, 31 ஆகிய இரு தேதிகளில் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டினர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைந்தனர். இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்பெயினின் சீயடா நகருக்குள் கடல் வழியாக மொராக்கோவை சேர்ந்த சட்டவிரோத அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர். அப்போது கடலில் மூழ்கியும், கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்களை மீட்டும் மொராக்கோவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை 75 ஆயிரம் பேர் ஸ்பெயினில் இருந்து மீண்டும் மொராக்கோவுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் 5 ஆயிரம் பேர் ஸ்பெயினின் சீயடா நகரில் இருப்பதால் அவர்களையும் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/deaths-of-100-trying-to-enter-spain-illegally




