சென்னை, திபெத் பனிப்பாறை விபத்து குறித்த முன்கூட்டிய கணிப்புகள் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய பனிச்சரிவு திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நேபாளத்தை தாக்கியது. அங்குள்ள ஆறுகளில் கடு ம்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 மத்திய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. வெள்ளத்துடன் பாறைகள், மண் மரங்கள் உள்ளிட்டவைகள் கலந்து அசுர வேகத்தில் பாய்ந்ததில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமனார்கள். 4-வது நாளாக தொடரும் மீட்பு பணி இதனையடுத்து நேபாள ராணுவம், போலீசார், தேசிய பேரிடர் படையினர் மீட்புபடையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறும் - சகதிகள் முழுவதும் பரவி உள்ள நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் பலரது உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. 2,301 பேர் பத்திரமாக மீட்பு நேபாளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் - திபெத்தில் மொத்தம் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்தில் மீட்பு பணிகள் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. நேபாள பெருவெள்ளத்தில் 2,301 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் 4,854 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம் இந்தநிலையில், திபெத் பனிப்பாறை விபத்து மற்றும் நேபாள வெள்ளப்பெருக்கு குறித்த முன்கூட்டிய கணிப்புகள் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளது சமூக வளைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 26, 2026 அன்று திபெத்-நேபாள எல்லையில் இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு (Glacier Collapse) மற்றும் பெருவெள்ளம் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில், நடப்பு துர்முகி (2026-2027) தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தில் இதற்கான எச்சரிக்கை முன்கூட்டியே எழுதப்பட்டிருந்ததாக ஜோதிடர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் "2026 - 2027 ஆண்டுகளில் சீனா அருகில் உள்ள திபெத் மலையில் பனிமலை உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்" என்று வாக்கிய பஞ்சாங்கத்தின் பொதுப் பலன்களில் முன்கூட்டியே அச்சிடப்பட்டுள்ளது. துல்லியமான பகுதி: விபத்து நடக்கும் பகுதி (திபெத்) மற்றும் பேரழிவின் தன்மை (பனி உருக்கம் மற்றும் வெள்ளம்) ஆகிய இரண்டும் பஞ்சாங்கக் கணிப்புடன் பொருந்திப் போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதே இத்தகைய தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-avalanche-almanack-predicts-in-advance




