தேனி, ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே இருந்த நகை அடகு கடையில் 139 சவரன் நகைகள் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகை அடகு கடை தேனி மாவட்டம் தும்மக்குண்டுவைச் சேர்ந்தவர் முருகன்(எ) துரைமுருகன் (வயது 38). இவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே நகை அடகுக்கடையை நடத்தி வந்தார். இந்த கடையில் ரோசனம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 6 சவரன் நகையை அடகு வைத்து ரூ.1.68 லட்சம் கடன் பெற்றிருந்தார். 139 சவரன் நகைகள் மோசடி சமீபத்தில் ரமேஷ் தனது நகையை மீட்பதற்காகச் சென்றபோது, அடகுக்கடை பூட்டப்பட்டு துரைமுருகன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் நகைகளைத் திருப்பித் தராமல் துரைமுருகன் மோசடி செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக துரைமுருகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/139-sovereigns-of-jewelry-stolen-from-pawn-shop-police-nab-3-people




