தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான மகிசா சூரசம்ஹாரம் 20-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர். தசரா திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. முத்தாரம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தக்கால் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekaranpattinam-mutharamman-temple-dasara-festival-pandak-kal-ceremony-held




