கோவை, கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- 717 கடைகள் மூடல் "மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்குவது என்ற வார்த்தையை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அவ்வாறு மது விற்பனை மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கோ. முதல்-அமைச்சருக்கோ கிடையாது. அப்படி ஒரு எண்ணம் இந்த அரசுக்கு இருந்திருந்தால், சமீபத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்க மாட்டோம். அதை தாண்டியும் மேலும் சில கடைகளை மூடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டு எடுப்பதும், அடுத்த தலைமுறையினர் இந்த பிரச்சினையில் சிக்காமல் தடுப்பதுமே அரசின் உறுதியான நோக்கம்" இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-intention-to-boost-government-revenue-through-liquor-sales-minister-vignesh




