சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூர பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட ‘பயணி’ குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,080-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ‘அம்மா குடிநீர்’ திட்டத்தின் கீழ் ரூ.10-க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி அரசு குடிநீர் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 2021-ஆம் ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது. நீண்டதூர பேருந்து இந்நிலையில், நீண்டதூரப் பேருந்து பயணிகளின் வசதிக்காக ‘பயணி’ என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.10-க்கு வழங்கும் திட்டம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்டதூர பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/passenger-drinking-water-bottle-for-rs10-in-long-distance-government-buses




