இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது ‘புஷ்பா 2' திரைப்படம். அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மற்ற சினிமாக்களிலும் அதிகரித்திருக்கிறது. புஷ்பா 2 இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் பெண் வேடமிட்டு அல்லு அர்ஜுன் ஜாதரா திருவிழாவில் நடனமாடுவார். தற்போது ஃபோர்ப்ஸ் இந்தியாவுக்குப் பேட்டியளித்த நடிகர் அல்லு அர்ஜுன், அந்த நடனம் தொடர்பாகவும், அதற்குத் தயாரானது பற்றியும் பகிர்ந்திருக்கிறார். அல்லு அர்ஜுன் பேசுகையில், "என்னுடைய திரைப் பயணத்திலேயே நான் செய்த கெத்தான விஷயம் என்னவென்றால், அது 'புஷ்பா 2' படத்தில் நான் பெண் வேடமிட்டு நடித்த காட்சிதான். தொடக்கத்தில் இந்த சண்டைக்காக வழக்கமான மாஸ் தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்துப் பார்த்தோம். ஆனால், அது இயக்குநருக்குத் திருப்தியளிக்கவில்லை. திருப்பதி பகுதியில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ‘கங்கம்மா தல்லி ஜாதரா’ திருவிழாவில் ஆண்கள் பெண்ணாக வேடமிட்டு வழிபடும் வழக்கம் உண்டு. அல்லு அர்ஜுன் அதை அடிப்படையாகக் கொண்டு, "நீங்கள் சேலை அணிந்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும்" என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். தொடக்கத்தில் இந்த யோசனையைக் கேட்டதும் எனக்குப் பயமாக இருந்தது. சேலை அணிந்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் மாஸ் மற்றும் கம்பீரம் குறையக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியது" எனக் கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/tollywood/allu-arjun-pushpa-2-saree-look-interview




