ஹனொய், வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்தனர். 18 மாலுமிகள் மாயம் இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென மூழ்கத்தொடங்கியது. இதையடுத்து, கப்பல் மாலுமிகள் உதவிகோரி அவசர அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, வியட்நாம், சீனா கடற்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் விரைந்து செயல்பட்ட சீன கடற்படையினர், நடுக்கடலில் சிக்கிய 44 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய 18 மாலுமிகள் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் வியட்நாம், சீன மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/eighteen-people-missing-in-south-china-sea-after-vietnamese-ship-sank




