சென்னை, சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன். அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர். அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pay-my-respects-and-salute-to-the-hero-azhugamuthukon-on-his-birth-anniversary-chief-minister-vijay




