உலகின் பல நாடுகளில் தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் சில நாடுகளில் தேர்தல் முறையோ, அரசியல் கட்சிகளோ முழுமையாக இயங்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். பஹ்ரைன்; பஹ்ரைனில் பல்வேறு அரசியல் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும், முக்கிய எதிர்க் கட்சிகள் இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வாரியங்களிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ பொறுப்பு வகிப்பதை அதன் கடுமையான சட்டங்கள் தடை செய்கின்றன. குவைத்; குவைத்தில் அரசியலமைப்புச் சட்டம் அரசியல் கட்சிகளை அனுமதித்திருந்த போதிலும், 1961-ம் ஆண்டிலிருந்தே அவை தடை செய்யப்பட்டுள்ளன. ஓமன்; 2019 முதல், முழுமையான முடியாட்சி நடைபெறும் இந்நாட்டில் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. ஓமனின் சுல்தான் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் கொண்டுள்ளார். கத்தார்; ஒரு அரசியலமைப்பு முடியாட்சி நாடான இங்கு,எமிர் பரம்பரையால் ஒரு மன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அனைத்து நிறுவனங்களையும் அவரே கட்டுப்படுத்துகிறார். 1999-ம் ஆண்டிலிருந்து இங்கு நகராட்சித் தேர்தல்கள் எதுவும் நடைபெறவில்லை. சவூதி அரேபியா; சவூதி அரேபியாவில் தேசியத் தேர்தல்களும், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நாடு ஒரு முழுமையான முடியாட்சியின் கீழ் ஆளப்படுகிறது. 2016-ம் ஆண்டிலிருந்து மன்னர் சல்மான் ஆட்சி செய்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகம்; ஐக்கிய அரபு அமீரகம் என்பது ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி நாடாகும். இதில் பரம்பரை வழிவந்த ஏழு ஆட்சியாளர்கள் முழுமையான அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். வாடிகன் நகரம்; வாடிகன் நகரத்தில், போப்தான் சட்டமியற்றும், நிர்வாக மற்றும் நீதித்துறையில் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக விளங்குகிறார்கள். போப், ஆளுநரகத்தின் தலைவர் மற்றும் கார்டினல் வெளியுறவுச் செயலர் ஆகிய அனைவரும், இந்த நகரத்தை ஆளும் முழுமையான தேர்ந்தெடுக்கப் பட்ட முடியாட்சி அமைப்பின் அங்கங்களாகத் திகழ்கின்றனர். ஷாஜகானின் காதலின் சின்னம். தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/do-you-know-about-the-countries-in-the-world-where-elections-are-not-held




