தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், துறவிக்காடு பகுதியில் உள்ள ஒரு வாலிபரின் வீட்டில் சண்டைக்கோழி வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சண்டைக்கோழி வாங்கியதில் முன்விரோதம் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அபின்தாஸ் (வயது 27). இவருக்கும், திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பாபு(21) என்பவருக்கும் இடையே சண்டைக்கோழி வாங்கியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நேற்று முன்தினம் இரவு அபின்தாசும் அவரது கூட்டாளிகள் சிலரும் துறவிக்காடு கிராமத்தில் உள்ள பாபு வீட்டுக்கு அவரை தேடி சென்றனர். பின்னர் பாட்டிலால் செய்யப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகளை அவரது வீட்டில் வீசி உள்ளனர். இதில் ஒரு குண்டு வெடித்தது. மற்றொன்று வெடிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-petrol-bomb-thrown-at-youths-house




