தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 9 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர். இளம்பெண்ணுக்கு தொடர் தொந்தரவு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர். இவரது மகன்கள் கனகராஜ் (வயது 25), கார்த்திக்(18). இவர்களில் சின்னப்பர் தி.மு.க. வார்டு செயலாளராகவும், கனகராஜ் த.வெ.க. நிர்வாகியாகவும் உள்ளனர். கார்த்திக் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை தினமும் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மன உளைச்சல் அந்தப் பெண்ணைப் பார்த்தால் தனது பைக்கில் வேகமாகச் செல்வது, தொடர்ந்து ஹாரன் அடிப்பது மற்றும் வீட்டு வாசலில் நின்று தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். கோஷ்டி மோதல் இதுகுறித்து அந்தப் பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவே, அவர்கள் கடந்த 15-ம் தேதி கார்த்திக்கை கண்டித்து சத்தம் போட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், கனகராஜ், சின்னப்பர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மோட்சம்(48) மற்றும் 2 சிறுவர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். 12 பேர் மீது வழக்குப்பதிவு இதுகுறித்த தகவலறிந்து வந்த எட்டயபுரம் போலீசார், கார்த்திக்கிடம் இருந்த அரிவாளைப் பறிமுதல் செய்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 12 பேர் மீது எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களையும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த மோகன்(30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான சிறுவர்கள் 2 பேரும் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மோகன் கோவில்பட்டி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 9 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீடியோ வைரல் இதனிடையே, இரு தரப்பினரும் அரிவாளுடன் மோதிக்கொள்ளும் பதற்றமான காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/faction-clash-sparked-by-youth-who-repeatedly-harassed-young-woman-3-arrested




