சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பணம் எங்கே? மக்கள் பணம் எங்கே பிரதமர் நரேந்திர மோடியே? ZERO ACCOUNTABILITY பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த PMCARES நிதி! 2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.909.64 கோடி நன்கொடை உட்பட ரூ.6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ.439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ.6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது. வெளியிடப்படாதது ஏன்? 1. 2022-23க்கு பின் ஆடிட் ஸ்டேட்மெண்ட்ஸ் வெளியிடப்படாதது ஏன்? 2. அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு ஆர்.டி.ஐ. (RTI) பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்? மத்திய அமைச்சர்களே இதன் அறங்காவலர்களாக பொறுப்பில் இருக்கும் போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்! எனவே, PM CARES நிதி நிச்சயம் ஆர்.டி.ஐ. வரம்பிற்குள் (Ambit of RTI Act) தான் வருகிறது. மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-peoples-money-manickam-thakur-asks-prime-minister-modi




