சென்னை, சட்டசபை தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில முன்னாள் அமைச்சர் வைகை செல்வனும் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில், கூடலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். சமீபகாலமாக அதிமுகவிலிருந்து முக்கியத் தலைவர்கள் விலகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பொன் ஜெயசீலன் விரைவில் தவெகவில் இணைவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனிடையே, கட்சித் தலைமை மீது அவர்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும், அதன் காரணமாகவே பலரும் கட்சியில் இருந்து விலகி வருவதாகவும் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/pon-jayaseelan-to-leave-aiadmk




