சென்னை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் உயர்கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக தமிழக கவர்னரிடம் புகார் அளித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டு நிகழ்ச்சி தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு பெ.விஸ்வநாதன் அவரது சொந்த தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்குான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாக கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதை குறை கூறுவது "காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்கிற கதையாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்க கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் போதகர் கேசவநாயகம் எழுதி கொடுத்ததை எடுத்துக்கொண்டுபோய் கவர்னரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது. பெ.விஸ்வநாதன் மீது கவர்னரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பு அரசியலையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதே உண்மையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-has-lodged-a-complaint-with-the-tamil-nadu-governor-that-is-contrary-to-the-truth-manickam-tagore




