சென்னை, மதுபானங்கள் மீது ‘சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற புதிய வரியை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்க மீட்புத் திட்டங்களுக்கு இந்த வரி பயன்படுத்தப்பட உள்ளது. 20 ரூபாய் தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் வாயிலாக, மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் விற்பனைக்கு பின் காலி மது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் பிரச்னை எழுகிறது. இதை கட்டுப்படுத்த புதிதாக வரி விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில் ஒன்றுக்கு, 20 ரூபாய்க்கு மிகாமல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா சட்ட சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மறு சுழற்சி முறை தமிழகத்தில் மது விற்கும் வணிகர்கள், இந்த தீர்வை வரி செலுத்த பொறுப்பாகிறார்கள். மதுபான வகைகள், அளவுகளை பொறுத்தும், மதுபானம் அடங்கிய கொள்கலன் அதாவது பாட்டிலின் வகையை பொறுத்தும், வெவ்வேறு கட்டண வீதங்களை குறிப்பிடலாம். இவ்வாறு கிடைக்கும் வருவாயை, மதுபான பாட்டில்களை மறு சுழற்சி முறையில் அப்புறப்படுத்தவும், மறு பயன்பாட்டை எளிதாக்கவும் பயன்படுத்தலாம். வன விலங்குகள் பாதுகாத்தல் மது பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்க மீட்பு திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தலாம். மது பழக்க அடிமைத் தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தலாம். மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கும் பயன்படுத்தலாம். சூழலியல், காடுகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாத்தல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்த நோக்கத்துக்காக, 2006ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. முன்னதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அளித்த விளக்க உரையில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-liquor-bottle-to-rise-by-rs-20-bill-tabled-in-the-assembly




