சென்னை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை, நெல்லை, ராமேசுவரம், பழனி, போடியில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை தாம்பரம்-மதுரை இடையே இன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாளை அதிகாலை 2.20-க்கு மதுரைக்கு சென்றடையும். மறுமார்க்கமாக நாளை மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது அதேநாள் இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். நெல்லை நெல்லையில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் (வ.எண்.06001) இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 6.30 மணிக்கு கூடல்நகர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06002) நாளை மதியம் 12.15 மணிக்கு கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடை கிறது. மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும், சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 17 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ராமேசுவரம்-பழனி இதேபோல் மற்றொரு சிறப்பு ரெயில் (வ.எண்.06780) ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 10.30 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06779) பழனியில் இருந்து நாளை மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 8.10 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் சத்திரப்பட்டி, ஒட்டன்சத் திரம், அக்கறைப்பட்டி, திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் ராமேசுவரம்-திருப்பதி ரெயிலுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். போடி அதேபோல, ஒரு சிறப்பு ரெயில் (வ.எண்.06004) போடியில் இருந்து நாளை பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மதியம் 1.30 மணிக்கு கூடல்நகர் ரெயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06003) நாளை கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 4.30 மணிக்கு போடி சென்றடைகிறது. ரெயில் இரு மார்க்கங்களிலும் மதுரை, வடபழஞ்சி (நாகமலை புதுக்கோட்டை). உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-to-be-operated-from-chennai-nellai-and-rameswaram-to-madurai




