சென்னை, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி அவர்கள் அங்குள்ள தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்டுவிழாவில் பங்கேற்று உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையைக் குறிப்பிட்டுப் பேசியதுடன் அதனை உஸ்பெக் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஆலோசனை விடுத்தது, திருக்குறளின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றும் பிரதமரின் முயற்சி பெருமை அளிக்கும் நிகழ்வாகும். உலகப் பொதுமறைக்கு மணிமகுடம் பிரதமர் அவர்கள் திருக்குறள் குறித்து பேசும் போது, “தமிழ் நூல்களில் உன்னதப் படைப்பான திருக்குறளை மொழிமாற்றம் செய்து படிப்பதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையேயான கலாசார உறவுகள் மற்றும், பரஸ்பர புரிதல்கள் மேலும் வலுவடையும் என்பதையும், மேலும் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களுடன் உஸ்பெக் மக்கள் எளிதாகத் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்” என்றும் கூறி உலகப் பொதுமறைக்கு மணிமகுடம் சூட்டியிருக்கிறார். தான் செல்லும் இடங்களிளெல்லாம் தமிழ் மொழியின் பெருமை, தமிழ் அறிஞர்களின் பெருமை, தமிழர்களின் வரலாறு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பறைசாற்றி வரும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-the-prime-minister-for-spreading-the-glory-of-thirukkural-all-over-the-world




