திருவனந்தபுரம், கேரளத்தில் ஆண்டுதோறும் கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை விவசாயம் செழித்தோங்கவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் நடத்தப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி 2-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பின்னர் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 3-ந் தேதி நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து கொல்லம் மாவட்டம் அச்சன்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். நிறை புத்தரிசி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/the-nirai-putharisi-ritual-at-sabarimala-will-take-place-on-the-3rd-of-next-month




