சென்னை, இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வாழ்த்துகள் 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் விருது பெற்ற அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சினிமாவின் பன்முகத் திறமையை உலக அரங்கில் உயர்த்தும் ஒவ்வொரு படைப்பும் நமது கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தொடர்ந்து பல புதிய உச்சங்களைத் தொடட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-premalatha-vijayakanth




