தேனி, தேனி மாவட்டம் போடிமெட்டு, குமுளி மலைப்பாதையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகள், போடி முந்தலில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சோதனைச்சாவடி ஆகிய 3 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் சோதனை செய்தனர். இந்த சோதனைகளின் போது 3 இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ.49,690-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இந்த சோதனையின் போது முந்தல் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டு உமாநாத் ஆகியோர் பணியில் இருந்தனர். போடிமெட்டு சோதனைச் சாவடியில் ஏட்டுகள் ராஜேஸ் கண்ணன், பாலமுருகன் ஆகியோரும், குமுளி சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஏட்டுகள் பாஸ்கர், அருளானந்தம் ஆகியோரும் பணியில் இருந்தனர். லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடர்ந்து 3 இடங்களில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரும் தேனி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். இதையடுத்து துறை வாரியான நடவடிக்கையாக 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பிரவீன் கவுதம் உத்தரவிட்டார். ஒரே நேரத்தில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/7-police-officers-suspended-after-being-caught-in-anti-corruption-raid




