விரைவில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகின்றன என்கிற தகவல் பரவி வருகிறது. அமெரிக்காவில் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்காக B1 மற்றும் B2 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த விசா மூலம் வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா சென்றவர்கள் அகதி உரிமை கோரி பலர் அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர். இதனால், இந்த நடைமுறைக்குச் செக் வைக்க B1 மற்றும் B2 விசாக்களை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. ட்ரம்ப்‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா? டார்கெட் யார்? 2016-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை, B1 அல்லது B2 விசா மூலம் அமெரிக்காவிற்கு வந்து, ஏற்கனவே அகதி உரிமை கோரியவர்கள் அல்லது தற்போது அதற்கு விண்ணப்பித்திருப்பவர்களை இந்த நடவடிக்கை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைக் கண்டறிய அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த விசா ரத்து குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், ‘கட்டம் கட்டமாகத்தான் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். என்ன பிரச்னை? அமெரிக்காவில் வழங்கப்படும் ‘அகதி உரிமை’ என்பது அவரவர் நாட்டில் உண்மையிலேயே அடக்குமுறையையோ அல்லது அதற்கான நியாயமான அச்சத்தையோ எதிர்கொள்பவர்களுக்கானது. ஆனால், இதைச் சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தி, பலர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுகின்றனர் என்று அமெரிக்க அரசு சொல்கிறது. ரத்து செய்யப்படும் விசாதாரர்கள் உடனே வெளியேற்றப்படுவார்களா, அல்லது அவர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா, உண்மையில் அகதியாக இருந்து அவர் அகதி உரிமையின் கீழ் இருந்தால், அவர்களால் ரத்தை மேல்முறையீடு செய்ய முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 'முதல் இந்தியர்' கிராண்ட் செஸ் டூரில் வென்ற பிரக்ஞானந்தா; ரூ.1.91 கோடி பரிசு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/us-targets-b1-b2-visa-holders-who-seek-asylum




