அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். த.வெ.க- வில் இணையும் வாய்ப்பு அதிகம் என்கிற தகவல்கள் வெளியாகின்றன. தன்னுடைய விலகல் குறித்து தெரிவித்துள்ள அவர், "அம்மாவின் மறைவிற்குப் பிறகு மாவட்ட கழக செயலாளராக தலைமை அறிவுறுத்திய பணிகள் அனைத்தையும் செய்து வந்தேன். எம்.எஸ்.எம் ஆனந்தன் 2020-ல் எந்தக் காரணமுமின்றி எனது மாவட்டச் செயலாளர் பொறுப்பு எடுக்கப்பட்டபோதும் தலைமைக்கு விசுவாசமாகப் பணியாற்றி வந்தேன். கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது. அதனைத் தடுக்க தலைமையும் விரும்புவதில்லை. என்றுமே தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில்தான், ஒரு இயக்கத்தில் தொண்டன் சிறப்பாக இயங்க முடியும். ஆனால், இன்றோ தலைமையே இயக்கத்தைப் பார்க்காமல் தங்களை மட்டுமே காத்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது. எதிர்க்கருத்து சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்ப தலைமையுடன் ஒரு சுயநலக் கூட்டம் இயங்கி கொண்டிருக்கின்றது. நான் என்றும் அ.தி.மு.க-வை என்னுடைய உயிர்க்கும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால், தேனுடன் ஒரு துளி விஷத்தைச் சேர்த்தாலும் விஷம்தான் என்பது போன்று தலைமையின் விடாபடியான குணமும், சுயநல போக்கும் தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பதுதான் நிதர்சன உண்மை. தண்டனைகளைத்தான் நான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார்தான் கருணையையும், மன்னிப்பைத் தருவார்கள். தன்னை இகழ்ந்தவர்களையும், தாழ்த்தியவர்களையும் கூட அரவணைத்து ஏற்றத்தைத் தந்தவர் அம்மா. எம்.எஸ்.எம். ஆனந்தன் இன்று அனைத்துக் கட்சிகளும் அ.தி.மு.க-வினரை அரவணைக்கத் தயாராக இருக்கும்போது அ.தி.மு.க-வின் தலைமை நீக்குவதில்தான் கவனம் செலுத்துகிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு அ.தி.மு.க எனும் மக்கள் தலைவர்கள் வளர்த்த இயக்கத்தில் இருந்து விடை பெறுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்து வந்த கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், என்னுடைய நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். அம்மா மறைந்தது முதலே தொடர்ந்து துரோகங்களையே நான் சந்தித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார். `எடப்பாடி பழனிசாமி வழங்கிய புதிய பதவிகளை ஏற்க மாட்டோம்' - அதிருப்தி நிர்வாகிகள் `திடீர்' முடிவு? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/admk-ex-minister-msm-anandhan-resignation-update




