Volledig artikel
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா தவெக அரசை 'ரீல் அரசு' என விமர்சித்து பேசியிருந்தார். சென்னை மாமன்ற கூட்டத்தின் அவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இப்போதைய முதல்வர் விஜய் என இருவரின் படமுமே மாட்டப்பட்டிருந்தது. சரியாக காலை 10 மணிக்கு மாமன்ற கூட்டம் தொடங்கியது. இரங்கல் தீர்மானம் முடிந்த பிறகு பேசிய மேயர் பிரியா, 'திமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தமிழக பொருளாதார வலிமை குறித்து பேசியதுதான் திமுகவுக்கான வெற்றி. நாம் கொண்டு வந்த திட்டங்களை பெயரை மாற்றியாவது செயல்படுத்தினால் மட்டுமே இப்போதைய அரசால் இயங்கவே முடியும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 தொகுதிகளில் 20 தொகுதிகளை திமுக கூட்டணி இழந்திருக்கிறது. ஆனால், இப்போது மக்கள் இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என நொந்து கொண்டிருக்கின்றனர். ரீல் ஆட்சிக்காக ரியல் ஆட்சியை விட்டு விட்டோம் என வருந்துகின்றனர். திமுக கவுன்சிலர்கள் மக்களுக்காக எப்போதும் போல அயராமல் உழைக்க வேண்டும்' என்றார். மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் மட்டும் அதிகாரிகளை வேண்டுமென்றே பணிமாற்றம் செய்கின்றனர் என திமுக கவுன்சிலர் ஆறுமுகம் குற்றஞ்சாட்டினார். அதுகுறித்து துணை மேயர் மகேஷூம், 'அரசு கட்சி பாரபட்சம் பார்க்காமல் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி செய்யும் அதிகாரிகளை மாற்ற வேண்டும்' என ஆணையர் சமீரனிடம் கேட்டுக் கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



