மும்பை. மும்பையில் கடந்த மாதம் பருவமழை ஏமாற்றத்தை தந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முதல் 2 நாட்களுக்கு நகருக்கு மிக பலத்த மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப் பட்டு இருந்தது. இந்தநிலையில், மும்பையில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நகரம் வெள்ளக்காடானது. 12 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 10 ஆயிரம் பேர் களமிறக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடு பட்டு வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டு உள்ளார். இந்தநிலையில், மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களில் 50 செ.மீட்டர் வரை அதி கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/mumbai-likely-to-receive-50-cm-of-rain-in-next-3-days




