சென்னை, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி-புத்தூர் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- வருத்தமும், வேதனையுமடைந்தேன் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் (வயது 60) க/பெ. பழனிச்சாமி, அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் யோகவர்ஷினி (வயது 11) த/பெ. நாகராஜ், அனன்யா (வயது 6) த/பெ. நாகராஜ், தனுஸ்ரீ (வயது 7) த/பெ. ஜெகதீஷ் மற்றும் போஸ்கிரண் (வயது 6) த/பெ. சின்னத்தம்பி ஆகியோர் மகேந்திரா தோஸ்த் வாகனம் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். சிறப்பு சிகிச்சை இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். நிவாரண நிதி இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindukkal-fatal-accident-4-children-dead-cm-vijay-announcement




