நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். இதனைத் தொடர்ந்து இது நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது குறித்து சி.ஜே.பி-யின் நிறுவனர் அபிஜித் தீப்கே, "இதுதான் ஜனநாயகம். அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் சும்மா போக மாட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும். View this post on Instagram A post shared by Cockroach Janta Party (@cockroachjantaparty) அந்த குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டாவதாக, கடந்த 20-ம் தேதி அராஜகம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த போலிஸ் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 'காக்ரோச்' உடன் மோதாதீர்கள்." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/governance/cjp-demands-one-crore-compensation-police-action-neet-protest




