ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளவேனில் வாலறிவன் சோனம் மாஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,898 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் அணிப் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. இளவேனில் வாலறிவன் இந்தப் போட்டியில் சீனா 1,904.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த ஸ்கோர் புதிய உலக சாதனையாகவும் பதிவானது. போட்டியை நடத்தும் ஜப்பான் 1,897.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 0.9 புள்ளிகள்! தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்தியக் கூட்டணி தொடக்கம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறது. யார் இந்த இளவேனில் வாலறிவன்? தமிழ்நாட்டின் கடலூரில் பிறந்து, குஜராத்தின் அகமதாபாத்தில் வசிப்பவர். சிறு வயதில் தடகளம், பேட்மின்டன் என பல விளையாட்டுகளில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், அவருடைய வாழ்க்கையின் திசையை மாற்றியது 13 வயதில் கையில் கிடைத்த ஒரு ஏர் ரைஃபிள். துப்பாக்கிச் சுடுதலை முதலில் அறிமுகமாகிப் பார்த்தவர், பின்னர் அதிலேயே தீவிரமாகப் பயிற்சி பெறத் தொடங்கினார். ஜூனியர் பிரிவிலேயே சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தியவர், 2018-ல் ISSF Junior World Cup-ல் தங்கம் வென்றார். இளவேனில் வாலறிவன் அடுத்த ஆண்டே, 2019 ISSF World Cup-ல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சர்வதேச கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து டோக்கியோ 2020 மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போது, ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற அணியின் முக்கிய வீராங்கனையாக மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார் இளவேனில். 13 வயதில் தொடங்கிய அந்தப் பயணம்… இன்று ஆசிய விளையாட்டின் பதக்க மேடையில் நிற்க வைத்திருக்கிறது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://sports.vikatan.com/asian-games-2026-india-secure-silver-in-womens-10m-air-rifle-team-event



