பார்படாஸ், டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் சமன் செய்துள்ளார். சதம் விளாசி சாதனை கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக். இவர் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக சதம் விளாசி சாதனை படைத்தார். அப்போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய டி காக், 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்களை பதிவு செய்தது. தோல்வி இப்போட்டியில் பார்படாஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 78 ரன்கள் விளாசினார். ஆண்ட்ரே பிளெட்சர் 8 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 22 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலியின் சாதனை இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் டி காக்கின் சதங்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. இதன்மூலம் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அதிக சதங்கள் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 13 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி, டேவிட் வார்னர் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் தலா 10 சதங்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள்: கிறிஸ் கெயில் - 22 சதங்கள் பாபர் அசாம் - 13 சதங்கள் விராட் கோலி - 10 சதங்கள் டேவிட் வார்னர் - 10 சதங்கள் குயிண்டன் டி காக் - 10 சதங்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/t20-centuries-south-african-star-equals-virat-kohlis-record-becomes-fifth-batsman-in-the-world




