செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் அனைக்கட்டு காவல் நிலையத்தில் சக போலீசாரிடம் இருந்து ரூ. 15 ஆயிரத்தை போலீஸ்காரர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு பணிநிமித்தமாக அனைக்கட்டு காவல் நிலையத்திற்கு சென்ற போலீஸ்காரர் செல்வகுமார், அங்கு ஓய்வு அறையில் பெண் போலீஸ்காரர் வைத்திருந்த ரூ. 5 ஆயிரம், எஸ்.ஐ. வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 15 ஆயிரம் பணத்தை திருடியுள்ளார். இந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்திய அனைக்கட்டு போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, போலீஸ்காரர் செல்வகுமார், சக போலீசாரின் பணம் ரூ. 15 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் செல்வகுமாரை ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு எஸ்.பி. உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-steals-rs-15000-from-colleagues-shocking-incident




