சென்னை, வீடுகளில் மின் கட்டண செலவை குறைக்கும் வகையில், பிரதமர் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. சூரியசக்தி மின் நிலையம் அதன்படி, 1 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட் அமைக்க ரூ.60 ஆயிரமும், அதற்கு மேல் திறன் கொண்ட நிலையங்களுக்கு ரூ.78 ஆயிரமும் மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இதனுடன் தமிழக அரசின் மேற்கூரை சூரியசக்தி மானிய திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு கடந்த செப்டம்பர் 21-ந்தேதி தொடங்கியது. இதன்படி, 1 கிலோவாட்டிற்கு ரூ.5 ஆயிரமும், 2 கிலோவாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், 3 கிலோவாட்டிற்கு ரூ.22 ஆயிரமும் தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. மானியம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு மானியங்களை சேர்த்து, 3 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் பெற முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற என்ற இணையதளத்தை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் 1 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 10 நாட்களில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/subsidy-of-up-to-rs-1-lakh-for-setting-up-a-solar-power-plant-16500-people-apply-in-10-days




