மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 7,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதற்கட்டமாக 3,000 கன அடி நீரை திறந்துவைத்தார். இதையடுத்து 1 ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில் 4 ஆயிரம் கன அடியாகயும், இரவு 8 மணிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.கடந்த ஐந்து நாள்களாக காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் 10,000 கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர் மட்டம் தற்போது 92.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-release-from-mettur-dam




