பாட்னா, பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு பள்ளியில் மொத்தம் 130 மாணவர்கள் உள்ள நிலையில், சுமார் 75 மாணவர்கள் அன்று மதிய உணவு சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களை கிராம மக்களின் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது சுமார் 40 மாணவர்கள் பீகார் ஷரீப் மாடல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சோப்பு பவுடர் கலந்ததாக குற்றச்சாட்டு உணவில் உப்புக்கு பதிலாக சோப்பு பவுடர் கலக்கப்பட்டதாக மாணவர்கள் மற்றும் சில தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், உணவில் உப்பு குறைவாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து சமையலர் தவறுதலாக உப்புக்கு பதிலாக சோப்பு பவுடரை எடுத்ததாகவும் கூறியுள்ளார். உப்பும் சோப்பு பவுடரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் இந்தத் தவறு ஏற்பட்டதாகவும், அந்தக் உணவே மாணவர்களுக்கு பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை மறுத்த மாவட்ட கல்வி அதிகாரி ஆனால், உணவில் சோப்பு பவுடர் கலந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மாவட்ட கல்வி அதிகாரி ஹேம்சந்திர் மறுத்துள்ளார். இதுவரை உணவில் சோப்பு பவுடர் கலந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிகாரிகள் ஆய்வு உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதலில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் பின்னர் பீகார் ஷரீப் மாடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நிலையை அறிய நாலந்தா சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய் பிரகாஷ் சிங் மற்றும் எஸ்.டி.ஓ கிஸ்லய் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர விசாரணை சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு தயாரிக்கப்பட்ட விதம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட விதம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணையில் யாராவது தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி ஹேம்சந்திர் எச்சரித்துள்ளார். இதனால் மாணவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/washing-powder-instead-of-salt-students-fall-ill-after-eating-school-lunch




