அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்றே எடுக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு. அதிமுக உறுப்பினர்கள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை 5 நாட்கள் ஆகியும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ட்டட எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர். தீர்மானம் நாளை எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்திருக்கிறார். "கொடுத்ததெல்லாம் கொடுத்தார். பாடல் பாடிய எம்எல்ஏ; சிரித்த முதல்வர் விஜய் முதல்வர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்த நிலையில்,"கொடுத்ததெல்லாம் கொடுத்தார். அவர் யாருக்காக கொடுத்தார். ஒருத்தருக்காக கொடுத்தார்.ஊருக்காக கொடுத்தார்” என்று தவெக எம்எல்ஏ சிந்து எம்ஜிஆர் பாட்டு பாடி நன்றி தெரிவித்தார். அதற்கு முதல்வர் விஜய் சிரிக்கிறார். "கொடுக்கிற காரை இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும்"- எம்எல்ஏ சண்முகன் "தமிழகத்தை தாங்கி பிடித்திருக்கும் முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு, அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொடுக்கிற காரை இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகின்றனர்"- எம்எல்ஏ சண்முகன் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை 'நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கிறது, ஆனாலும்.'- மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நன்றி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் பேசிய அவர், "அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் என்று சொன்னவுடன் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கிறது. என்னிடமும் கார் இருக்கிறது. ஆனால் நம் முதலமைச்சர் கொடுத்த காரில் செல்லும்போது நான் பெருமையாக பணிக்கு செல்வேன். அவர் கொடுத்த காரில் தொகுதியைச் சுற்றி வரும்போது அதற்கு இருக்கக்கூடிய கெத்து எம்எல்ஏ என்ற கெத்து. முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார். "அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய் தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். அதன்படி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும். வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். முதல்வர் விஜய் தவிர பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு ஒரு லிட்டர் பால் ரூ.38ல் இருந்து ரூ.41-க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் வட சென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/today-tn-assembly-live-update-19-08-2026




