சென்னை, உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையிலும், இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை கவுரவிக்கும் விதமாகவும் உலகெங்கிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1839-ம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து 'டேகுயரோடைப்' என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். பிரெஞ்சு அரசு இதற்கான காப்புரிமையை வாங்கியதுடன், இந்த நாளைப் புகைப்படக் கலையின் தொடக்கமாக அறிவித்தது. முதன்முதலில் 2010 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று உலகளாவிய அளவில் ஆன்லைன் கேலரி மற்றும் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டதையொட்டி முதல்-அமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இதனையடுத்து முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-photographs-photographers




