தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இதனிடையே, அமெரிக்காவுடனான மோதலால் உயிரிழந்த ஈரான் உச்ச தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து, அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 4ம் தேதி அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி தொடங்கியது. ஈரானின் பல்வேறு நகரங்களுக்கும் அலி காமேனியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அதேபோல், ஈரானின் அண்டை நாடான ஈராக்கிற்கும் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 4.3 கோடி பேர் 6 நாட்கள் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்த நிலையில் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் முசாலா மத வழிபாட்டு தலத்தில் அலி காமேனியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், உச்ச தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/iran-media-say-43-million-people-attended-leaders-funeral-ceremonies




