அரியலூர், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடி திருவாதிரை விழா நாளை நடக்கிறது. ஆடி திருவாதிரை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை வாயிலாக நடத்திட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டிற்கான ஆடி திருவாதிரை அரசு விழா நாளை (திங்கட்கிழமை) கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். காலை 9.30 மணிக்கு மங்கல இசை நிகழ்ச்சியும். காலை 10 மணி முதல் 11 மணி வரை தொடக்க விழா நிகழ்ச்சியும், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவ-மாணவிகள் மங்கல இசை மற்றும் வீணை இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். கலை நிகழ்ச்சிகள் அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும், கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, தென்னக பண்பாட்டு மையம் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிகளும், மக்களிசை கலைஞர்களின் நையாண்டி மேளம், கரகாட்டம், கொம்பிசை, மரக்கால் ஆட்டம், பறையிசை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் ஆடித்திருவாதிரை விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வசதிக்காக குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aadi-thiruvadhirai-festival-to-be-held-tomorrow-at-brihadeeswarar-temple-in-gangaikonda-cholapuram




