சென்னை, மீன்வள பல்கலையில், நடப்பு கல்வியாண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா, மீன்வள பல்கலையின் கீழ், 10 உறுப்பு கல்லுாரிகள், ஒரு தனியார் கல்லுாரி இயங்கி வருகிறது. இதில், மீன்வள அறிவியல் படிப்பில் 187; மீன்வள இன்ஜி., 50; மீன்வள 43; உணவு உயிர்தொழில்நுட்பம் தொழில்நுட்பம் 42; பி.பி.ஏ., 2; இள நிலை தொழிற்கல்வி 78 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, 15,585 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், மீன்வள படிப்புக்கான தரவரிசை பட்டியலை, நேற்று நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலை வளாகத்தில், பல்கலை துணை வேந்தர் பெலிக்ஸ் வெளியிட்டார். கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அனிஷ்குமார், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த சேதுராஜன், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பிரியவதனா ஆகியோயார் 200க்கு 199.50 கட் - ஆப் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தனர். மாணவி அக்ஷயா, 198.89 மதிப் பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு, ஆகஸ்ட் முதல் வாரத்தில், நாகையில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ranking-list-released-for-the-current-academic-year-at-the-fisheries-university




