சென்னை, காவிரிபடுகையில் 5-வது அணையாக மேகதாதுவை கட்டி முடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்கேற்கக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜோசப் விஜய் - டி.கே.சிவகுமார் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இருமாநில முதல்வர்கள் சந்திப்பு நடப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக, ஆகஸ்டு 3-ந் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல இருக்கிறார். அன்று பிற்பகல் 12 மணிக்கு கர்நாடக தலைமைச் செயலகமான விதான் சௌதாவில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசுகிறார். இந்த நிலையில், கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முகமது முபாரக் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு அரசு ஒப்புக்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் சட்ட வலிமையை குறைத்து விடும். காவிரி நீர் உரிமையை எந்த காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க கூடாது. எனவே கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் உடனே கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-chief-minister-vijay-should-drop-plans-to-visit-karnataka-sdpi-statement




