மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மாணவிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் திட்டத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்துறை மற்றும் கல்வித் துறையின் கூட்டு முயற்சியின் மூலம் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 "பாக்கெட் மணியாக" வழங்குவதற்கான முயற்சியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார். இந்த முயற்சியானது மாணவிகளுக்கு நிதி உதவி வழங்குவதையும் அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட 'சம்பாதியுங்கள் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டது போன்று இப்போது உதவி வழங்கப்படும் என்று துறையின் அதிகாரி ஒருவர் கூறினார். மாணவிகள் இத்திட்டத்திற்கான நிதியானது முதன்மையாக தொழில் நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளைகள் அல்லது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து வரும் என்று அதிகாரி தெளிவுபடுத்தினார். கல்லூரி நேரத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏதேனும் ஒரு வேலையை வழங்கவும், அவர்களுக்கு CSR நிதியில் அதற்கு சம்பளமாகக் கொடுக்க கல்லூரிகள் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார். உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விப் படிப்புகளைத் தொடரும் மாணவிகளுக்கு இத்தகைய பண ஊக்குவிப்பு வகுப்பறைகளில் பாலின விகிதத்தை அதிகரிக்க உதவும்" என்று அந்த அதிகாரி கூறினார். இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் மாணவிகள் பயனடைவர். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டங்களைத் தொடர்ந்து, மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை மாணவர்களை அணுகும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது. கடந்த வாரம், மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் சார்பு துணைவேந்தர்கள் குறைந்தபட்சம் 50 மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் பாட்டீல் உத்தரவிட்டார். மேலும் பாட்டீல் சமீபத்தில் மாணவர்களைச் சந்தித்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மனித தலையீட்டைக் குறைக்க இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் மாணவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. மாணவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்கும் திட்டம் குறித்து மும்பை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான மிருதுல் நைல் கூறுகையில், "இந்தத் திட்டம் பெண்களைத் திருப்திபடுத்தும் நோக்கத்தில் இருக்கலாம், ஆனால் இது அவர்களுக்குப் பெரிதும் உதவும். கல்வி கட்டணம் உயர்ந்து வருகிறது, மேலும் பணவீக்கமும் அதிகமாக உள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் கல்விச் செலவு ஆகியவற்றால், இத்தகைய வரவேற்க வரவேற்கத்தக்கது" என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா: சாலை இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; மக்களைத் திரட்டி சாலையமைத்த பழங்குடி கணவன்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/2000-monthly-allowance-for-college-female-students-maharashtra-governments-new-scheme




