லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஹிதாயத் நகர் பகுதியை சேர்ந்த பெண் நிஷாத் பாத்திமா(வயது 26). இவர் லக்கிம்ப்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம்போல் நிஷாத் பாத்திமா பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, காலை 11.30 மணியளவில் பாத்திமாவை சந்திப்பதற்காக முகமது சவுத் அன்சாரி(வயது 28) என்ற நபர் பள்ளிக்கு வந்துள்ளார். அந்த நபர் நேராக 2-வது மாடியில் பாத்திமா இருந்த வகுப்பறைக்கு சென்றுள்ளார். அன்சாரியை கண்டதும் அதிர்ச்சியடைந்த பாத்திமா, அவரை உடனடியாக பள்ளியை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அன்சாரி தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து பாத்திமாவை சுட்டார். இதில் பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அதே துப்பாக்கியால் அன்சாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டார். பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்த கோர சம்பவத்தைப் பார்த்து மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பாத்திமா மற்றும் அன்சாரியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/young-man-enters-school-premises-shoots-dead-a-female-teacher-and-commits-suicide




