சென்னை, ஆற்காடு அருகே 60 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் போலீசார் அவரை கைது செய்தனர். 60 வயது மூதாட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். நேற்று நள்ளிரவில் இவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது23) என்ற வாலிபர் கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமை மூதாட்டி கதவைத் திறந்தவுடன், எதிர்பாராத விதமாக உள்ளே புகுந்த தஷிணாமூர்த்தி மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றார். இதையடுத்து மூதாட்டி பயத்தில் அலறி கூச்சலிட்டார். எனவே மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அமுக்கி சத்தம் போட முடியாமல் அவர் தடுத்துள்ளார். மேலும், தொடர்ந்து கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த அந்த வாலிபர், மூதாட்டி என்றும் பாராமல் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதிரடி கைது இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அருகிலுள்ள போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆற்காடு போலீசார் உடனடியாகச் செயல்பட்டு, வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக முயன்ற குற்றவாளி தட்சிணாமூர்த்தியை தேடிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/60-year-old-woman-sexually-assaulted-near-arcot-young-man-arrested




