பெங்களூரு, மராட்டியத்தை சேர்ந்த 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் கடந்த வாரம் பெங்களூருக்கு கிரிக்கெட் விளையாட வந்தார். பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது அவர் தனது செல்போனை பார்த்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் ஒரு பெண்ணிடம் இருந்து கிரிக்கெட் வீரருக்கு டேட்டிங் செயலியில் இருந்து ஒரு தகவல் வந்தது. பின்னர் அந்த பெண் தனது சுய விபரங்களை பகிர்ந்தார். பின்னர் அந்த பெண் ஒரு செல்போன் எண்ணை அனுப்பி வாட்ஸ் அப்பிற்கு வருமாறு கிரிக் கெட் வீரரரை அழைத்தார். பின்னர் அந்த பெண் திடீரென வாட்ஸ்அப்வீடியோ அழைப்பில் வந்து தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக காட்சியளித்தார். இதையடுத்து சில நிமிடங்களில் அந்த வீடியோ அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் கிரிக்கெட் வீரரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தனது முழு அழைப்பையும் பதிவு செய்து விட்டதாகவும் எனக்கு பணம் தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வேன் என்றும், சமூக வலை தளங்களில் வெளி யிடுவேன் என்றும் விடுத்துள்ளார். மிரட்டல் இதனால் அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரர் உடனடியாக அந்த பெண் ணுக்கு ரூ.1500 அனுப்பினார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து அதிகப் பணம் கேட்டு தொடர்ச்சியாக கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரர் நடந்த விபரங்களை தங்களது நண்பர்களிடம் கூறினார். பின்னர் இது குறித்து போலீசில் செய்யப்பட்டது. புகார் அதன்படி போலீசார் அந்த இளம்பெண் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் பி என்எஸ் ஆகியவற்றின் கீழ் மின்னணு வடிவில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது அனுப்புதல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் எச்சரிக்கை இது குறித்து போலீசார் கூறியதாவது:- சைபர் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஒரு உண்மையான பெண்ணுடன் பேசுகிறார்கள் என்று நம்ப வைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும், செயற்கை குரல்களையும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவரை ஒரு சங்கடமான சூழ்நிலையில் பதிவு செய்தவுடன், அந்த காட்சிகளை பதிவு செய்து கொண்டு மிரட்டி பணம் பறிக்கின்றனர். எனவே இது போன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக போலீசில் புகார்செய்ய வேண்டும். அவர்களுடன் அனைத்து தொடர்பு களையும் நிறுத்த வேண்டும். மேலும் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்காதீர்கள் என்று எச்சரித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/girl-harassed-with-obscene-images-after-fake-parcel-message-on-whatsapp-in-bengaluru




