பென்னாடம், கர்நாடகத்தில் காவிரி படுகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் குடகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. கே.ஆர்.எஸ். அணை இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 589 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது குடகில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 85 கனஅடி ஆக இருந்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 110.26 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 179 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணை இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 45 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 993 கனஅடியாக குறைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,271.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டி.நரசிப்புரா அருகே ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 13 ஆயிரத்து 685 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 758 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. ஒகேனக்கல் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பரிசல் இயக்க தடை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 13-வது நாளாக நீடிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-13th-consecutive-day




