புதுடெல்லி, கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து கடந்த ஜூலை 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. பிலிகுண்டுலு அளவீட்டின்படி, ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய 9.140 டி.எம்.சி.க்கு பதிலாக 2.915 டி.எம்.சி.யும், ஜூலையில் 31.240 டி.எம்.சி.க்கு பதிலாக 0.714 டி.எம்.சி.யும், ஆகஸ்டு 9-ந் தேதி வரை 13.341 டி.எம்.சி.க்கு பதிலாக 6.757 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பெற வேண்டிய 53.721 டி.எம்.சி.க்கு பதிலாக 10.386 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. 12 ஆயிரம் கனஅடி நீர் இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு சென்ற 11-ந் தேதி கூட்டப்பட்டது. அதில் ஆகஸ்ட் மாதத்திற்குரிய நிலுவை நீர் மற்றும் வழக்கமான நீர் சேர்த்து மொத்தம் 37 டி.எம்.சி. நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், ஆணையம் இதனை ஏற்காமல், 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை மட்டும், அதாவது 15.552 டி.எம்.சி.நீரை மட்டும் திறக்கப் பரிந்துரைத்தது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு இந்த அளவு விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியது. எனவே, நிலுவை நீரான 21.357 டி.எம்.சி. நீரையும், விகிதாசார அடிப்படையில் ஆகஸ்டு 12 முதல் இறுதி வரையிலான மொத்த நீரின் அளவான 37 டிஎம்சி நீரை திறக்க நாள்தோறும் 10 நாள்களுக்கு வினாடிக்கு 21.413 கனஅடி நீரை அதாவது 1.85 டிஎம்சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். காவிரியில் தண்ணீர் திறப்பு இந்த நிலையில், கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-has-stated-that-our-india-is-one-that-upholds-pluralism-and-unity




