நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் கவனித்தால் போதுமா?, பாதங்களில் ஏற்படும் சிறிய காயங்களைக்கூட ஏன் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது? இவை போன்ற முக்கியமான மற்றும் அவசியமான கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்களிடமிருந்து நேரடியாகப் பதில் பெறும் அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘பாதமே நலமா? Season 3’ நிகழ்ச்சி. பாதமே நலமா 'ஆனந்த விகடன்' மற்றும் 'Dr. RK Diabetic Foot and Podiatry Institute' இணைந்து நடத்தும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி, இன்று சென்னை மைலாப்பூரில் உள்ள AIOBEU ஸ்வஸ்திகா (AIOBEU Swasthika, Dr. Radhakrishnan Salai, Mylapore) அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாதமே நலமா இன்று காலை தொடங்கி பிற்பகல் 1:30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நீரிழிவு நோயால் பாதங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியம், சிறுநீரகம், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைப்புகளில் துறைசார்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். பங்கேற்கும் மருத்துவ நிபுணர்கள் இந்த அரங்கில் கலந்துகொண்டு தங்களது துறைசார்ந்த ஆழமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் மருத்துவர்களின் பட்டியல் இதோ: * Dr. ராஜேஷ் கேசவன் (Consultant Podiatric Surgeon - பாத நல அறுவை சிகிச்சை நிபுணர்) * Dr. கிருஷ்ணா (Consultant Vascular Surgeon - ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்) * Dr. ஜெயநிவாஷ் ஜே (Interventional Nephrologist - சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர்) * Dr. ஈஸ்வர் (Orthopedic Surgeon - எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்) * Dr. பிரசாத் ராவ் எல் (Consultant Endocrinologist & Diabetologist - நாளமில்லா சுரப்பி மற்றும் நீரிழிவு நோய் சிறப்பு நிபுணர்) பாதமே நலமா நேரடி விவாதம் மற்றும் கேள்வியும் பதிலும் மருத்துவர்களின் சிறப்புரைகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்கான பிரத்யேக Panel Discussion மற்றும் Audience Q&A அமர்வுகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்பாளர்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவுபெறலாம். சிறப்பு விருந்தினர் மற்றும் பங்கேற்பு விவரங்கள் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் புகழ்பெற்ற நடிகரும் நாடகக் கலைஞருமான S.V. சேகர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் பாத ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வைப் பெற இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/health/diabetes-to-foot-care-paadhame-nalama-season-3-health-awareness-show




