கோழிக்கோடு, பிரதமர் குறித்து அவதூறு அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் திருநங்கை ஜான் மணி தாஸ் (வயது 48). இவர் மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகர்களுக்கு ஒப்பணை கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் ஜான் மணி தாஸ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அவருக்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர். அத்துடன் அவர் மீது 132 போலீஸ் நிலையங்களில் பா.ஜனதா கட்சியின் மகளிர் பிரிவு தொண்டர்கள் புகார் கொடுத்து இருந்தனர். குறிப்பாக பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவர் நவ்யா ஹரிதாஸ், ஜான் மணி தாசை கைது செய்ய கோரி கோழிக்கோடு மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். கைது அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து ஜான் மணிதாஸ் பேசிய அவதூறு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த திருவம்பாடி பகுதியை சேர்ந்த எபின்(35), பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகு தியை சேர்ந்த சஜித்(25) ஆகியோர் மீதும் கோழிக்கோடு போலீஸ் நிலைய சைபர் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஜான் மணி தாஸ், தனக்கு சரியாக மலையாளம் தெரியாது என்றும், தனது பேச்சு தவறாக இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்ததை அடுத்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் ஜான் மணி தாஸ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/defamatory-remarks-against-the-prime-minister-three-people-including-a-film-makeup-artist-arrested




