வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இத்தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் குவாலிபையர் 2 சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ், வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோதுகின்றன. 238 ரன்கள் குவிப்பு இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் அண்ட்ரிஸ் குஸ் 73 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சான் பிரான்சிஸ்கோ அணி களமிறங்கி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-san-francisco-unicorns-vs-washington-freedom-1st-innings-score




