சென்னை, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது. இந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-constituency-bypoll-dmk-chief-stalin-consultation




