திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் வரை 'வி.ஐ.பி.பிரேக் தரிசனம்' செப்டம்பர் வரை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம்: ஆனிவார ஆஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் வரை முக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன. வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 17-ந் தேதி ஆனிவார ஆஸ்தானமும், 19-ந் தேதி ஆண்டவன் ஆசிரம சுவாமிகளுக்கு பெரிய மரியாதை நிகழ்வும் நடக்கிறது. 29-ந் தேதி திருமலை ஜீயர் சுவாமிகளின் சதுர்மாச்ய சங்கல்பம் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி பவித்ரோத்சவ அங்குரார்ப்பணமும், 24-ந் தேதி பவித்ர சமர்ப்பணமும் நடக்கிறது. செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 14-ந் தேதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவ அங்குரார்ப்பணமும், 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஸ்ரீவாரி பிரம்மோற்சவமும் நடக்கிறது. வி.ஐ.பி.பரிந்துரை கடிதம் மேற்கண்ட நாட்களுக்கு முந்தைய நாளில், மிக முக்கிய பிரமுகர்களைத் தவிர, வி.ஐ.பி. பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த நாட்களில் வி.ஐ.பி.பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய உத்தேசித்துள்ள பக்தர்கள் மேற்கண்ட கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, ஒத்துழைப்பு வழங்குமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/details-of-cancellation-of-vip-break-darshans-from-july-to-september-in-tirupati-temple




